INCREASE BUSSES IN THE TRICHY ANNA UNIVERSITY ROUTE
Sign Now
தங்களின் மேலான கவனத்திற்கு,
திருச்சியில் இருந்து நாள்தோறும் பேருந்தில் புதுகோட்டை வரை பணிநிமித்தம் செல்வோரின் எண்ணிக்கை மிக அதிகமாகவுள்ளது ஆனால், கடந்த ஆறு மாதங்களாகவே பாரதிதாசன் மற்றும் அண்ணா பல்கலைகழக மாணவர்களின்அபரிதமானஎண்ணிக்கையால் திருச்சி புதுகோட்டை வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் காலை எட்டரை மணி முதலே மத்திய பேருந்து நிலையத்திலேய நிரம்பி வழிகின்றன .
டிவிஎஸ் சுங்கசாவடி , விமான நிலையம் நிறுத்தங்களில் இருந்து புதுகோட்டை செல்ல விழைவோர் பேருந்தில் ஏறுவதே சிரமமாக உள்ளது- பேருந்துகள் ஏற்கனவே நிரம்பி வழிவதால் எங்கும் நிற்பது இல்லை - அப்படியே நின்றாலும் ஏற முடிவதில்லை குறிப்பாக பெண்கள் படும் சிரமம் மிக அத்கமாகும் மேலும் இதனால் குறித்த நேரத்திற்கு கீரனூர் மற்றும் புதுக்கோட்டை செல்ல வேண்டிய ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அவ்வாறு செல்ல சிரமமேற்படுகிறது .
மொபாசில் பேருந்துகளில் மாணவர் கூட்டம் நிரம்புவதினால் பேருந்து நடுதுனர்களுக்கு சில்லறை பாக்கி தருவது மற்றும் படியில் தொங்கிக்கொண்டே பயணம் செய்யும் மாணவர்கள் போன்ற பல இடைஞ்சல்கள், மற்றும் அண்ணா பலகலகழகதிற்கு அப்பால் கிட்ட தட்ட பேருந்து முழுவதுமே காலியாக
புதுகோட்டை வரை செல்ல நேரிடுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த அரசு எல்லா தரப்பு மக்களும் வியந்து போற்றும் வண்ணம், வேறு எந்த காலத்திலும் இல்லாத வகையில் சிறப்பானதொரு மக்கள் நேச நிர்வாகத்தை வழங்கிவருகிறது, இந்த வழித்தடத்தில் தினசரி பயணிĪுகளை இயக்கினால் பயணிப்போர் சிரமம் வெகுவாக குறையும். தங்கள் இவ்விசயத்தில் தலையிட்டு பயணிப்போர் சிரமங்களை களைய வேண்டுகிறேன்.
தங்களின் பல முக்கிய பணிகளுக்கிடையே சில மணித்துளிகள் இந்த மின் அஞ்சலுக்கு ஒதுக்கியதற்கு நன்றி.
பணிவண்புடன்,
If you already have an account please sign in, otherwise register an account for free then sign the petition filling the fields below.
Email and password will be your account data, you will be able to sign other petitions after logging in.
Continue with Google